கிராமியப் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘கிராமத்திற்கு அபிவிருத்தி’ வேலைத் திட்டத்தின் கீழ் கிராமியப் பாதைகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்தல், பிரஜைகளை அடிப்படையாகக் கொண்ட நீர் வழங்கல் திட்டங்கள், பொதுக் கிணறுகள் மற்றும் விவசாயக் கிணறுகள், மின்சாரம் வழங்குதல், நீர்ப்பாசனத் திட்டங்கள், கிராமிய சந்தைகள், மீன் விற்பனை நிலையங்கள் உட்பட பல்வேறு துறைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கௌரவ பிரதம மந்திரி அவர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய, அரசாங்க வரவு செலவுத் திட்டத்திட்டத்தின் பன்முகப்படுத்தப்பட்ட மூலதன வரவுசெலவுத்திட்ட நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து வருடாந்தம் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்காக ரூபா 10 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பன்முகப்படுத்தப்பட்ட மூலதன வரவு செலவுத்திட்ட நிகழ்ச்சித் திட்டத்தினை அமுல்படுத்துவதில் ஏற்பட்ட சிரமங்களைக் எதிர்கொண்டிருந்தமையினாலும், மேலதிகமாக ரூபா 5 மில்லியனும் கொண்டதாக, 2016 ஆம் ஆண்டிற்காக, தலா ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் மொத்தமாக ரூபா 15 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன், நாடளாவியரீதியல் ரூபா 3375 மில்லியன் பெறுமதியான 22,669 கருத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.